எந்தெந்த காலத்தில் எந்தெந்த பயிர்களை பயிரிடலாம் மாணவர்களுக்கு விளக்கிய விவசாயிகள்.

கோவை அரசம்பாளையம் பகுதியிலுள்ள அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு வேளாண் பாடத்திட்டம் பயிலும் மாணவ மாணவிகள் “கிராமபுற பயிற்சி திட்டத்தின்” கீழ் விவசாயிகளின் விவசாய முறைகளை நேரில் பார்த்து அறிந்துகொள்ளுதல், விவசாய நிலங்களில் நேரடியாக கள பணி செய்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேபோல் மாணவிகள் பாடத்திட்டத்தில் பயின்றவற்றை விவசாயிகளிடம் பகிர்ந்துகொள்வது போன்ற நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில் கிராமபுற பயிற்சி திட்டத்தின்  கீழ் குளத்துப்பாளையம் கிராமத்திலுள்ள விவசாயிகளை நேரடியாக சந்தித்தனர். 

அப்போது எந்தெந்த காலத்தில் எந்தெந்த பயிர்களை பயிரிடலாம் என்ற பயிர் நாட்காட்டியினை விவசாயிகள் மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினர். இதன் மூலம் விவசாயிகள் மாணவர்களுக்கு அங்கு விளையும் முக்கிய பயிர்களின் காலங்களை தெரிவித்தனர். இதில் கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், பேராசிரியர்கள் முனைவர் சிவராஜ், முனைவர் சத்யப்பிரியா ,முனைவர் ரீனா மற்றும் முனைவர் நவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Loading