வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காவிட்டால் தினம்தோறும் அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் நடத்தும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை பச்சை நிற குப்பை தொட்டிகளிலும் மற்றும் மக்காக குப்பைகளை நீல நிற குப்பை தொட்டிகளில் சேகரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
பச்சை மற்றும் நீல நிற குப்பை தொட்டிகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முறையாக வைத்து பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கோவை மாநகரை தூய்மையாக பராமரிக்க தங்களது பங்களிப்பை முகமலர்ச்சியுடன் செய்து தர வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதி 2016 இன் படி தினம்தோறும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Leave a Reply