பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தொண்டாமுத்தூர் பகுதியில் கொடி அணிவகுப்பு.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் மக்கள் அச்சமின்ற வாக்களிக்கவும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக காவல்துறை சார்பில் காவலர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தபட்டு வருகிறது. இன்னிலையில் கோவை மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் காவல்துறை அணிவகுப்பு நடத்தபட்டது.

சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என‌ சுமார் 200 நபர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இக்கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading