உணவுப் பாதுகாப்பு மற்றும் உரிமம் மற்றும் பதிவு சான்று புதுப்பிக்க (Renewal) உணவு வணிகர்கள் தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் எனவும் அவ்வாறு செய்ய இயலாதவர்கள் பொது சேவை மையம் மற்றும் FSSAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட Food Safety Mitra என்ற சேவை பையத்தை தொடர்பு கொண்டும் உரிமம்/பதிவு விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய உனாவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது, எனவும் இந்த புதிய அறிவிப்பின்படி, உணவுப் பாதுகாப்பு உரிமம் (License) பெற வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்பவர்கள் முதல் கட்டமாக ரூபாய்.1000/- மட்டும் விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும். அத்தகைய ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு பின் அங்கீகரிக்கப்பட்டால் உரிமத் தொகையின் மீதி தொகையை செலுத்துவதன் பேரில் உணவுப் பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைன் மூலம் தாங்களாகவே தங்களது மின்னஞ்சல் முகவரியின் (Mail Id) மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் மின்னஞ்சல் முகவரி தவறாக இருப்பின், உணவு பாதுகாப்புத் துறையின் FoSCnS இணைய தளத்தில் அதாவது தாங்கள் ஏற்கெனவே விண்ணப்பித்த இணைய தள முகவரியில் சென்று உள் நுழைவு வாயில் (Login Credential) வழியாக உள்ளே சென்று Dash Board-ல் issued என்கிற இடத்தில் கிளிக் (click) செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே உரிமச் சான்று மற்றும் பதிவு சான்றை பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் FSSAI-ஆல் அங்கீகரிக்கபட்ட ஆன்வைன் விண்னாப்பத்திற்கு உணவு வணிகர்கள் 30 நாட்களுக்குள் மீதி தொகையினை செலுத்த தவறினால் அவர்களது விண்ணப்பம் தானாகவே இரத்தாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய நடைமுறையில் உணவுப் பாதுகாப்பு உரிமம் 30 நாட்களுக்கு முன்பாக ,ஆன்லைன் மூலம் புதுப்பிக்க நாள் ஒன்றுக்கு ரூ.100/- என அபராதம் இதுவரை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய நடைமுறையில் 30 நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலம் ,புதுப்பிக்க தவறினால் விதிக்கப்படும் அபராதம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள புதிய நடைமுறையில் உணவுப் பாதுகாப்பு உரிமம் (License) புதுப்பித்தல் ஓராண்டுக்கு ,மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி உணவுப் பாதுகாப்பு பதிவு சான்று மட்டும் ஆன்லைன் மூலம் புதிதாக பெறும் போதும் மற்றும் புதுப்பிக்கும் போதும் உணவு வணிகர்கள் தங்கள் விருப்பதிற்கேற்ப ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை பதிவு சான்று (Registration Certificate) ஆண்டு ஒன்றுக்கு ரூ.100/- என ஐந்தாண்டு வரையில் ரூ.500/- வரை செலுத்தி தங்களாகவே ஆன்லைன் மூலம் மேற்கூறிய முறையில் பெற்று கொள்ளலாம். ஆனால் பதிவு சான்றை பொறுத்தவரையில் புதுப்பித்தல் என்பது ஒன்று முதல் ஐந்தாண்டு வரை என ,ஏற்கனவே இருந்த முறையே தொடர்கிறது.
மேலும் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பு காலாவதியாகும் நாளிலிருந்து (180 நாட்கள்) ஆறு மாதங்கள் முன்பிலிருந்து ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகும் உரிமம்/பதிவு சான்று மீண்டும் புதுப்பிக்க 90 நாட்களுக்குள் உரிமத் தொகையில் 3 மடங்கு அபராத கட்டணமும், 180 நாட்களுக்குள் புதுப்பிக்க ஐந்து மடங்கு அபராத கட்டணமும் செலுத்தி ஆன்லைன் மூலம் ஏற்கெனவே மேற்கூறிய முறையில் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் உரிமம் மற்றும் பதிவு சான்று புதுப்பிக்க (Renewal) ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் எந்தவித ஆய்வும் இல்லாமல் உடனடியாக புதுப்பிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் உரிமம் மற்றும் பதிவுச் சான்று (Certificate) தங்களின் மின்னஞ்சல் முகவரி (Mail Id) மூலமாகவே அல்லது ஏற்கெனவே விண்ணப்பித்த FoSco இணைய தள முகவரியில் சென்று சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே உணவு வணிகர்கள் தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் எனவும், அவ்வாறு செய்ய இயலாதவர்கள் பொது சேவை மையம் மற்றும் FSSAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட Food Safety Mitra என்ற சேவை மையத்தை தொடர்பு கொண்டும் உரிமம்/பதிவு விண்ணப்பங்களை தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். FSSAI என ஆல் அங்கீகரிக்கப்பட்ட https://mitra.fssai.gov.in/ என்ற இணையதளத்தில் கோவை மாவட்டத்தின் mitra சேவை மையங்களின் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எர்களையும் தொடர்பு கொண்டு உரிமம் மற்றும் பதிவு சான்று விபரத்தினை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்படும் போது அவ்விண்ணப்பத்திற்கான சேவை கட்டணம் மற்றும் உரிமம்/பதிவு சான்றிற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தாங்கள் அறிந்தால் 0422-2220922 என்ற எண்ணிற்கும், 93616 38703 என்ற அலை பேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகாரினைத் தெரிவிக்கலாம்.
மேலும் உணவு வணிகம் செய்யும் அரசு/தனியார் உணவு வணிகர்கள் உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம் /பதிவு பெறுவது Sec-31-ன் படி சட்டப்படி அவசியமானது. அவ்வாறு உரிமம்/பதிவு பெறப்படாமல் செயல்படும் உணவு வணிக நிறுவனங்களின் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த நடைமுறையை கவனத்தில் கொண்டு உணவு வணிகர்கள் பயனடைய,வேண்டுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் பொது மக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்:- தீபாவனி பண்டிகையை முன்னிட்டு தற்போது உணவு பாதுகாப்பு அலுவலர் என சிலர் கூறி இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்களிடம் மற்றும் இதர உணவு வணிகர்களிடம் கள ஆய்வு என்ற பெயரில் பயமுறுத்தி பணம் பறிப்பதாக சில தகவல்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மூலமாகவும் மற்றும் காவல் துறையின் மூலமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. எனவே உணவு பாதுகாப்பு அலுவலர் என கூறி கள ஆய்வு மேற்கொள்ள வந்தால் அவரிடம் உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கான அடையாள அட்டை கேட்டு சரிபார்க்கவும், மேலும் அவர்கள் மீது சந்தேகம் இருப்பின் இலஞ்சம் மற்றும் இதர புகார்கள் குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண்.0422-2220922 மற்றும் 93616 38703 என்ற அலை பேசி எண்ணிற்கும், ஊழல் தடுப்பு மற்றும் கர்காணிப்பு துறையின் 0422-2449550 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply