கோடை காலத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. இன்னிலையில் கோவையில் வான்மழை பொழிய வேண்டியும், பாரத நாடு செழிப்புடன், வளத்துடன் இருக்க வேண்டியும், தொழிற்ச்சிறக்க கஜ பூஜையும், கோமாதா பூஜையும், சங்கு பூஜை அஸ்வமேத யாகங்களுடன் நடைபெற்றது.
குளோபல் விஸ்வகர்மா பவுண்டேஷன் சார்பில் ஸ்ரீதர் ராமச்சந்திரன் தலைமையில் கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில் நடத்தபட்ட இந்த சிறப்பு யாகத்தில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், கட்டட வாரிய தலைவர் பொன்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பாரத் மக்கள் கட்சி பாபுஜி சாமிகள், பக்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற கஜ பூஜையில் யானைக்கு பிடித்தமான பழங்கள் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து யானை ஊர்வலமாக அழைத்து செல்லபட்டு உணவளிக்கபட்டது. சிறப்பாக நடைபெற்ற யாகத்தில் பலர் கலந்துகொண்டு மனமுறுகி வழிபாடு செய்தனர்.
Leave a Reply