ஆடல், பாடல் என களைகட்டிய “கேலக்ஸி 2023” கலை விழா

கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கேலக்ஸி 2023” எனும் தலைப்பில் கலை விழா நடைபெற்றது. மாணவர்களின் படிப்பு ஒரு புறம் இருந்தாலும் செல்போன், முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ரீல் என மொபைல் உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். இன்னிலையில் அவர்களுக்கு ஒரு பிரேக் கொடுக்கும் விதமாகவும், மாணவர்களை நிஜ உலக இருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாகவும் நடனம், பேச்சுப்போட்டி , ஓவியம், சமையல் , தனிநபர் நடிப்பு, குறும்படம், புகைப்படம் என அவர்களது தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் ஒரு கருவி தான் இந்த கேலக்ஸி கலைவிழா. 

இவ்விழாவில் 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். முன்னதாக நடைபெற்ற விழாவின் துவக்க நிகழ்வில் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் சார்லஸ் வரவேற்புரை வழங்கினார். இதனைத்தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் இரத்தினமாலா தலைமையுரை ஆற்றினார். 

இதனைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா சிறப்புரையாற்றினார். கலை என்பது ஒரு தவம், அதில் மனம், உடல், ஆன்மா மூன்றும் ஒரு நேர்கோட்டில் இணையும்பொழுதுதான் முழுமை பெரும். மேலும் தான் கற்றுக்கொண்டதை பிறர்க்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசனையோடு தருபவன் கலைஞன் எனக் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாளராக பிரபல நடனக்கலைஞர் பாபிஎரிக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்  பரிசுகளை வழங்கிச்  சிறப்புரையாற்றினார்.

மாணவர்கள் சமுதாயத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் குறிப்பாகப் பெண்கள் தங்களை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் குறித்து பேசினார். மேலும் நம்பிக்கைக்கும் தெரிந்து கொள்வதற்கும் இடையிலான வேறுபாடுகளை மாணவர்கள்  உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். மேலும் விழா மேடையில் மாணவர்களின் ஆடல், பாடல், இசை, ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளை மாணவ மாணவிகள் கண்டு ஆரவாரம் செய்தனர்.

Loading