விநாயகர் பிறந்த ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளை விநாயகர் சதுர்த்தி நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் உலக புகழ் பெற்ற புலியகுளம் முந்தி விநாயகருக்கு அதிகாலையிலேயே பால், மஞ்சள், சந்தனம், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு ராஜ கோலத்தில் காட்சியளித்தார்.
இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்ததுடன் சிறப்பு வழிபாடு செய்தனர். உலக புகழ் பெற்ற 19 அடி உயரத்தில் மற்றும் 190 டன் எடை கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர் சிலையாக கருதப்படும் இந்த முந்தி விநாயகரின் பிரமாண்டமான உருவம் 21 சிற்பிகளைக் கொண்டு 6 ஆண்டுகால உழைப்பினால் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பல இடங்களில் தேடி இறுதியில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற இடத்தில் இந்த விநாயகரின் உருவம் செய்வதற்காக மிகப்பெரிய பாறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply