விநாயகர் சதுர்த்தி நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு விநாயகர் சிலைகள் வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோவை, பொன்னியராஜபுரம் பகுதியில் கண்ணன் துளசி தம்பதி மற்றும் அவரது மகள் கர்ணிகா ஆகியோரது வீட்டில் “ஜி20 கணேசா” என்ற பெயரில் ஜி 20 நாடுகளின் தேசிய கொடிகளை வைத்து விநாயகரை வடிவமைத்து காட்சிபடுத்தியுள்ளனர்.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, யுனைடெட் ஸ்டேட்ஸ் ரஷ்யா, சவுத் ஆப்பிரிக்கா, டர்க்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்ஸிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, யுனைடெட் கிங்டம் சைனா, இந்தோனேசியா, ஜப்பான், சவுத் கொரியா உள்ளிட்ட நாடுகளின் கொடிகளை வைத்து கணேசா உருவம் அமைத்து அசத்தியுள்ளனர். உலக நாடு திருப்பி பார்க்கும் அளவில் ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அதனை ஒட்டி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஜி20 கணேசா சிலை வடிவமைத்ததாக தெரிவித்தனர்.
மேலும் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து 10 நாட்களாக ஜி 20 கணேசா சிலையை உருவாக்கியதாக கூறியவர்கள், கடந்த ஆண்டு இந்தியா செழுமையாக இருக்க வேண்டும் என்று ரூபாய் கணேசா இருந்தாகவும் அதற்கு முன்னதாக ஆண்டு குழந்தைகள் கல்வியில் வளம் பெற வித்யா கணேசா சிலையை வைத்திருந்ததாகவும் கூறினார். மேலும் இந்த கணேஷா விநாயகரின் சிலைக்கு பின்புறம் “one earth, one family, one future first god” என அச்சடிக்கப்ட்ட பேனர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply