கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் “குப்பையில்லா கோவை” என்ற விழிப்புணர்வு மற்றும் களப்பணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்றது.
இதில் தூய்மை பாரத இயக்கம் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊக்குவிப்பாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான “குப்பை இல்லா கோவை” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நெகிழி ஒழிப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply