உலகம் முழுவதும் டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நாளில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தன்னார்வ அமைப்புகள் உட்பட ஏராளமானோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக மாற்று திறனாளிகள், ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட வாக்கத்தான் நடைபெற்றது.
இதில் பாதிப்புக் குள்ளானவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கும்,பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது. இதில் இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வீல் சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏராளமானவர் வாக்கத்தானில் ஆர்வமுடன் பங்கேற்று உற்சாகத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக வாரந்தோறும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி தருவதற்கான யாசியா (YASYA) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் தற்போது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படுத்தபட இருப்பதாவும் வருங்காலங்களில் இதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த இருப்பதாகவும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply