கோவையில் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் சூலூர் பகுதியில் மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட இராணுவ பாதுகாப்பு படையினர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
Leave a Reply