கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நான் முதல்வன் நிரல் திருவிழா, புத்தாக்க தேவைகளுக்கான பிரச்சனைகளை கண்டறிந்து இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பான பயிற்சி பட்டறை, கூடுதல் தலைமை செயலாளர் / தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் உமா சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பயிற்சியாளர் திருதீபன், மாவட்ட திறன்பயிற்சி அலுவகை உதவி இயக்குநர் வளர்மதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் உட்பட தொழில்துறை கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், தொழில்துறை உரிமையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய புத்தாக்க நிறுவன இயக்குநர் உமா சங்கர் தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக் கொணர்ந்து அவர்களை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புதிய தொழில் முனைவோரை உருவாக்கவும் “நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். தற்போது இத்திட்டத்தின் மூலம் நிரல் திருவிழா நடத்தப்படுகிறது. நிரல் திருவிழா என்பது உள்ளூர் தேவைகளுக்கேற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தாக்க சிந்தனையின் மூலம் மாணவர்கள் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக ‘நிரல் திருவிழா – நான் முதல்வன்” என்ற பெயரில் பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மற்றும் நிறுவனங்களில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பதிவேற்றலாம். ஒவ்வொரு துறையும் அரசு குறிப்பிட்ட 10 தலைப்புகளில் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து பதிவேற்ற வேண்டும். வலைதளத்தில் குறிப்பிடப்படும் தரவுகள் மாணவ சமூகத்தினரிடையே புதுமையான சிந்தனைகள் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் “நான் முதல்வன் நிரல் திருவிழா” என்ற திட்டத்திற்கான பயிற்சி பட்டறை மாவட்டந்தோறும் புத்தாக்க பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.
அந்த வகையில் இதுவரை 36 மாவட்டங்களில் நடத்தப்பட்டு 37-வது மாவட்டமாக தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று “நான் முதல்வன் நிரல் திருவிழா என்ற திட்டத்திற்கான பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.இப்புத்தாக்க பயிற்சி பட்டறையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பு ஆண்டில் புதியதாக கண்டுபிடிப்பு செய்வதற்கு தேவையான “புத்தாக்க தேவைகள், பிரச்சனைகள் கண்டறிதல்” என்பதற்கான பயிற்சி மற்றும் செயலாக்கம் நடைபெறும். இந்த பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (Tamilnadu Skill Development Corporation) மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development And Innovation Institute) ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக நடத்துவார்கள், அரசு அலுவலகத்தில் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள், தொழில் நிறுவனங்களில் தேவைப்படும் தொழில் நுட்ப உதவிகள் குறித்து பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இறுதி ஆண்டுக்கு ப்ராஜக்டாக கொடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அளவில் சிறந்த 40 குழுக்களின் ப்ராஜக்ட் தேர்வு செய்து முதல் 10 ப்ராஜக்ட்களுக்கு தலா ரூ.1 இலட்சமும், 30 ப்ராஜக்ட்களுக்கு தலா ரூ.25,000/- மும், அரசால் வழங்கப்படவுள்ளது. இந்த நான் முதல்வன் நிரல் திருவிழாவுக்கான அடிப்படையாக செயல்படும்”புத்தாக்க பிரச்சனைகள் தேவைகள்” குறித்து தாங்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள விருக்கிறார்கள். ஆகவே அரசுத்துறை அலுவலர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள் தங்களது துறையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தீர்க்க முடியாத சவால்களை பதிவு செய்யுமாறு தெரிவித்தார்.
Leave a Reply