கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர்,தமிழ்நாட்டில் மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் கல்லை எடுத்து காட்டுவது போட்டோவை எடுத்து காட்டுவது என கவன ஈர்ப்பிற்காக தேவையில்லாததை செய்து கொண்டுள்ளார் என கூறினார்.கோவையில் உள்ள சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து வருவதாகவும் திமுக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் பீக் ஹவர் மின் கட்டணம் காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் இதேபோல் பாஜக அரசு ஜாப் ஆர்டருக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் தொழில் துறையினர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் எனவும் கூறியதுடன்,முதலமைச்சர் ஸ்டாலினை யாரும் பார்க்க முடியாத நிலை உள்ளது எனவும் தொழில் துறையினர் கோரிக்கைகளுக்கு முதலமைச்சரோ உதயநிதி ஸ்டாலினோ மற்றுமுள்ள அமைச்சர்களோ செவி சாய்க்காததால் தொழில் நலிவடைந்துள்ளது எனவும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் இப்படி இருக்கவில்லை என்றும் சிறுகுறு தொழில்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என்றும் உறுதியளித்ததுடன் கடந்த 3 ஆண்டுகளில் பாஜகவும் திமுகவும் ஒரு வளர்ச்சியை கூட கோவைக்கு கொண்டு வரவில்லை என்றும் 3 வருடங்களாக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கோவைக்கு எதுவும் செய்யவில்லை, இதை செய்வேன் அதை செய்வேன் என அவர் சொல்வது அப்பட்டமான பொய் என்றும் விமர்சித்தார்.
அதிமுக செய்ததை கொச்சைப்படுத்தும் வகையில் 40 சதவீதம் ஊழல் என்கிறார் ,ஆனால் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக ஆசியாவிலேயே சிறந்த ஸ்மார்ட் சிட்டி கோவை என்ற விருதும் உள்ளாட்சி துறையில் நல்ல திட்டங்களை கொண்டு வந்ததற்காக 143 விருதுகளையும் கொடுத்தது மத்திய அரசு என்றும் கூறிய அவர்,40 சதவீதம் கமிஷன் வாங்கியவர்களுக்கு எப்படி மத்திய அரசு விருது கொடுக்க முடியும்?அப்படியானால் நீங்கள் பணம் பெற்று கொண்டு விருது வழங்கினீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் அண்ணாமலை பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் எனவும் அண்ணாமலை என்றால் பொய்.,பொய் என்றால் அண்ணாமலை என்றும் என்ன வேண்டுமானாலும் சொல்லாலாம் பின்னர் அதை கடந்து செல்லலாம் என்றிருக்கும் அண்ணாமலையால் கோவைக்கு நன்மையை செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார். மணல் ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட டைரியில் அண்ணாமலைக்கு மாதம் தோறும் 5 கோடி ரூபாய் கொடுத்தாக இருந்தது எனவும் அந்த 5 கோடி ரூபாயை செலவு செய்வதற்காக கோவைக்கு வந்துள்ளார் எனவும் நடத்துவதற்காக தமிழக முழுவதும் நிறைய வசூல் செய்த அண்ணாமலை வேட்பாளராக நிறுத்துவதற்கும் பல இடங்களில் வசூல் செய்துள்ளார் இதை வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்று தான் சொல்ல வேண்டும் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.
இதேபோல் வேட்பாளரான பின்னர் தொழில் துறையினரை மிரட்டி வசூல் செய்து வருவதாகவும் நான் சொல்வது தவறு என்றால், அண்ணாமலை என் மீது வழக்கு போடட்டும் நீதிமன்றத்தில் யார் யாரிடம் வசூலித்தார் என்ற விவரங்களை தரத் தயாராக உள்ளோம் ஆனால் இந்த விபரங்களை பட்டியலிட இப்போது எனக்கு நேரமில்லை என்றும் தெரிவித்தார்.மேலும் அண்ணாமலை முன்னாள் எஸ்.பி. வேலுமணியை விவாதத்திற்கு அழைக்கிறார் எனவும் அவர் எம்எல்ஏ, அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர்,பல ஆண்டுகளாக அரசியலில் உள்ளவர்.,ஆனால் அண்ணாமலை பாராசூட்டில் இருந்து குதித்தது போல அரசியலில் குதித்தவர் என்றும் ரஜினி கட்சி ஆரம்பிக்காததால், பாஜகவில் சேர்ந்தார் என்றும் சாடிய அவர், போதைப்பொருள் விவகாரம் பற்றி திமுகவும், பாஜகவும் வாய் திறக்கவில்லை., திமுகவும், பாஜகவும் சமமானவை என்றும் கூறினார். அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரித்து இருக்க வேண்டும்., அபிடவிட்டை 11 மணிக்கு முன்பு தந்திருக்க வேண்டும்.,ஆனால் அவர் 5.17 க்கு தான் தந்துள்ளார். இது குறித்து ஏன் திமுக வாய் திறக்கவில்லை? எனவும் சுயேட்சைகளின் வேட்பு மனுவில் கமா, முற்றுப்புள்ளி வைக்கவில்லை என நிராகரித்துள்ளார்கள்.
ஆனால் படித்த அறிவாளி என சொல்லும் அண்ணாமலைக்கு இந்த சாதாரண விசயம் தெரியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். தோல்வி பயத்தில் அவர் இப்படி செய்திருக்க வேண்டும் இலையென்றால் கட்சி சொன்னதாலும், செந்தில் பாலாஜி உதவி செய்ததாலும் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டிருக்க வேண்டுமென்பது எனது யூகம் என்றும் கூறிய சிங்கை ராமச்சந்திரன், 100 சதவீதம் அண்ணாமலையின் அஃபிடவிட் செல்லாது என்றும் அவருக்கு 2, 3 சதவீதம் பேர் வாக்களித்தாலும், அவை செல்லாத வாக்குகளாகி விடும் என்பதால் ஜெயிக்காத ஒருத்தருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
Leave a Reply