ஜேசிஐ (JCI) என்பது இரண்டு லட்சம் உறுப்பினர்களை கொண்ட இளம் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் உலகளவிய கூட்டமைப்பாகும். இந்த அமைப்பானது உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறந்த சமூகங்களை உருவாக்கி, தேசிய சிறந்த தலைவர்களையும் உருவாக்குகிறது. இளைஞர்கள் சந்திக்கவும், கற்றுக் கொள்ளவும், தொழில் முனைவோர்களாக வளரும் ஒரு சூழலை வழங்குவதுடன், கூட்டங்கள் நிகழ்வுகள், பேச்சாளர்கள், திட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம் தொழில் முனைவர்களுக்கான பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
இன்னிலையில் ,கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள கோஇந்தியா வளாகத்தில் ஜேசிஐ இயக்கத்தின் கோவை மண்டலத்தின் துவக்க விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஜேசிஐ-யின் உலக தலைவரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கவின் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கோவை மண்டலத்தின் தலைவராக கல்லூரி மாணவி அருணா பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜேசிஐ-யின் உலகத் தலைவர் கவின் குமார், ஜேசிஐ இயக்கத்தின் 2024 ஆம் ஆண்டு உலகத் தலைவராக தான் பொறுப்பேற்றுள்ளதாகவும், ஜேசிஐ இயக்கம் இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 28 மண்டலமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
பொதுவாக உலகத் தலைவர் தான் இயக்கத்தை துவங்கி வைப்பார்கள். தமிழ்நாட்டில் கோவையில் 27-வது மண்டலத்தை துவங்கியிருப்பதால் தமிழன் என்று முறையில் இன்று கோவையில் துவங்கி வைத்ததாக தெரிவித்தார். ஜேசிஐ இயக்கத்தில் 18 முதல் 40 வயது உள்ளவர்கள் மட்டுமே செயலாற்ற முடியும், 40 வயது பிறகு இயக்கத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் என தெரிவித்தவர், இந்த இயக்கம் மூலமாக தலைவர்கள், சமுதாய பண்பு, தொழில் அதிபர்கள் உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார். இந்த இயக்கமானது 1915-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த இயக்கம் 109-வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதாக தெரிவித்தார்.
ஜேசிஐ மூலமாக பல்வேறு நாட்டிற்கு பயணிக்கும் போது இளைய தலைமுறையினர் ஒரு சிறந்த தலைவர்களாக விளங்குவார்கள் என்று கூறினார். ஜேசிஐ-யில் சேர்வதற்கு கல்வித் தகுதி ஏதும் கிடையாது மற்றும் கல்லூரி மாணவர்கள்,அரசு அதிகாரிகள்,தொழிலதிபர்கள் போன்றவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்படலாம் என்றார். ஜேசிஐ மூலமாக இந்தியாவில் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர், தற்பொழுது கோவா முதல்வர், மங்கோலிய நாட்டின் பிரதமர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆகியோரை தலைவராக உருவாக்கி மக்களுக்கு சேவை செய்துவருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
Leave a Reply