இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட கிளை சார்பில் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி கவுண்டம்பாளையத்தில் புதிய ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ரத்த தானம் கொடுப்பவருக்கும்,தானம் பெறுபவருக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதமாகவும், பராமரித்தல் மற்றும் குணப்படுத்துதலோடு, அவசரகதியில் ரத்தம் தேவைப்படுவோர்க்கு உதவுவதை நோக்கமாக கொண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த ரத்த வங்கி மருத்துவமனைகள், தனி நபர்களுக்கு சேவையை வழங்குகிறது இரத்த சேகரிப்பு, சேமிப்பு மற்றும் வழங்கல் ஆகியவை முழுமையான தூய்மையுடன் மேற்கொள்ளப்படும். ரத்த தானம் செய்வோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவசர நேரத்தில் அவர்களிடம் முறையாக அறிவித்து ரத்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக இதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Leave a Reply