சர்வதேச பெண் குழந்தைகள் தின கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதி மொழியேற்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்பதை வலியுறுத்தி உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வாசிக்க பள்ளி மாணவிகள் மற்றும் சமூக நலத்துறை பெண் அலுவலர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, போட்டோ பாண்ட்டில் பள்ளி மாணவிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். 

முன்னதாக நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு  இளஞ்சிவப்பு வண்ண பேண்ட்(Band) யை கையில் கட்டிவிட்டு இனிப்புகள் மற்றும் பூங்கொத்தை வழங்கி சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

Loading