ஜி எஸ் டி வரி, திடீர் சோதனைகளால் முடங்கும் நிலையில் இரும்பு வியாபார தொழில்.

இரும்பு உள்ளிட்ட உலோகங்களை ஸ்க்ராப் செய்து சந்தைபடுத்தும் குறுந்தொழில் வர்த்தம் கோவையில் பெருமளவில் நடக்கின்றன. வாகனங்கள், இயந்திரங்கள், சாதங்களின் பயன்பாட்டுக்கு பின்னர் அதனை மறு சுழற்சிக்காக ஸ்கிராப் செய்து சந்தைபடுத்தும் இந்த வர்த்தகத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர் (கோவை மாவட்ட இரும்பு ஸ்கிராப் வியாபாரிகள் சங்கம்)த்தின் வருடாந்திர பொதுக்குழு கோவையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் ஸ்கிராப் தொழிலின் நெருக்கடி மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது பேசிய நிர்வாகிகள், இரும்பு வியாபாரிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சோதனை என்ற பெயரில் எங்கள் கம்பெனிக்குள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள்  சோதனை செய்து வருகிறார்கள். இது தொழில் வளர்ச்சிக்கு தடையாக அமைந்திருக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு தொழிலை பாதித்திருக்கின்றன. முன்பு 4 சதவிகிதமாக இருந்த வரி, ஜி எஸ் டிக்கு பின்னர் 18 சதவீதமாக உயர்ந்திருக்கின்றன.

வரி உயர்வினால் கூடுதல் செலவினங்கள் உள்ளிட்டவற்றால் லாபம் ஈட்ட முடியவில்லை. பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகள் கொடுக்கப்பட்டு வருவதால், சிறு குறு தொழில்களுக்கு எந்தவித சலுகையும் கிடைப்பதில்லை.

அதேபோல இரும்பு ஸ்கிராப் லாரிகளில் வந்தால், அது எங்கிருந்து வந்தது என நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். நாங்கள் இதனால் ரத்தக்கண்ணீர் வடித்து வருகிறோம். 40 லட்சம் ரூபாய் வரையிலான வர்த்தகத்துக்கு மாணியம் தரப்படுகின்றன. ஆனால் இரும்பு உள்ளிட்ட உலோகங்களின் விலை விண்ணை தொட்டிருக்கின்றன. எனவே, 5 கோடி வரையிலான வர்த்தகத்துக்கு மானியம் தர வலியுறுத்தினர். இதுபோன்ற நெருக்கடியினால் 70% சிறு குறு தொழில் இரும்பு வியாபாரிகள் தொழிற்சாலைகளை மூடி விட்டார்கள். ஆகவே ஒன்றிய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

Loading