டெல்லி தனியார் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு விமான மூலம் கோவை திரும்பிய ஈஷா யோகா மைய நிறுவன சத்குருவிற்கு கோவை விமான நிலையத்தில் ஏராளமான ஒரு திரண்டு கையில் விளக்கு ஏந்தியும் கண்ணீர் சிந்தியும் வரவேற்ப்பளித்தனர்.ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு கடந்த 17ஆம் தேதி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து மதுத்துவமனையில் பத்து நாள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த 27ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் நான்கு நாட்கள் டெல்லியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சத்குரு இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் திரண்ட ஈஷா தன்னார்வலர்கள் விவசாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
வரவேற்பு பதாகைகளை கையில் ஏந்தி ஒரு தரப்பினரும் பெண்கள் தங்கள் கைகளில் திருவிளக்கையும் மலர் தட்டுகளையும் ஏந்தியும் வரவேற்பு அளித்த நிலையில் ஆண்களும் பெண்களும் கண்ணீர் மல்க கதறி அழுது சத்குருவை வரவேற்று ஈஷாவிற்கு வழி அனுப்பினர்.
Leave a Reply