கே.ஜி குரூப்பின் குறைந்த இஎம்ஐயில் சொந்த வீடு அறிமுகம்.

கே.ஜி குழுமத்தின் ஒரு அங்கமான டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனம், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே காமராஜர் சாலையில் சிக்னேச்சர் சிட்டி என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கோயம்புத்தூரில் டவுன் & சிட்டி டெவெலபெர்ஸின் பதினான்காவது குடியிருப்புத் திட்டமாகும். சிக்னேச்சர் சிட்டி வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான குடியிருப்பு வசதிகளை வழங்குகிறது. 

இதில் ஸ்டுடியோ குடியிருப்பு ரூ 19.99 லட்சம், 1 பி.ஹெச்.கே குடியிருப்பு ரூ. 31.5 லட்சம், 2 பி.ஹெச்.கே குடியிருப்பு ரூ. 51.00 லட்சம், மற்றும் 3 பி.ஹெச்.கே குடியிருப்பு ரூ. 75 லட்சம்* எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக மையங்கள் போன்ற முக்கிய வசதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

சிங்காநல்லூர் கோயம்புத்தூரில் மிகபெரிய குடியிருப்பு பகுதியை உள்ளடக்கிய முக்கிய பகுதியாகும். நகரங்களுக்கு இடையேயான பேருந்துகளுக்கு சிங்காநல்லூர் மையபுள்ளியாகவும் உள்ளது. மேலும் சொந்த வீடு வாங்க வேண்டுமென்ற கனவை நினைவாக்கும் வகையில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading