குழந்தைகள் இன்ஸ்ட்டா , ரீல்ஸ்களில் கவனம் செலுத்துவதால் சரியான விஷயத்தில் கவனத்தை செலுத்த முடியாமல் உள்ளனர் – தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் 

பள்ளி கல்வி படிப்பு முடிந்த பின் மாணவர்கள் எப்படி தங்கள் அடுத்த இலக்கை முடிவு செய்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளியின் நிறுவனர் அரவின்தன், முதல்வர் சரண்யா திருநாவுக்கரசு மற்றும் பெற்றோர்கள் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  மாணவர்களிடையே பேசிய அவர் மாணவர்கள் தங்கள் கனவுகளை வெளியே கூறினால் விமர்மனம், கேலி செய்வார்கள், ஆனால் யாருக்காகவும் உங்கள் கனவுகளை மாற்றிக்கொள்ளாதீர்கள், ஒரு நாள் நீங்கள் கனவுகளை நினைவாக்கும் போதும், விமர்சித்து பேசிவர்கள் உங்களை நன்றாக தெரியும் என வெளியே பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். 

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற பிறத்தவர்கள் குழந்தை என எண்ண கூடாது. அவர்களது கனவுகளை நிறைவேற்ற உதவுபவர்கள் தான் நீங்கள் என்பதை உணர வேண்டும். குழந்தைகள் ரேடியோ போல், நன்றாக டியூன் செய்ய வேண்டும், குழந்தைகளிடம் பெற்றோர்கள் பேச வேண்டும். திறமை எதில் உள்ளதோ அதில் குழந்தைகள் பயணிக்க வேண்டும். தற்போதைய பெற்றோர்களுக்கு சகிப்பு தன்மை குறைந்துள்ளது. அதனால் இன்று மிக விரைவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள், கல்வி நிறுவனங்கள் அதை வியாபாரம் ஆக்கிவிட்டது. வீட்டில் பெற்றோர்கள் உண்மை பேசினால் குழந்தைகளும் பேசுவார்கள், குழந்தைகள் திறமைகளை பெற்றோர் நம்ப வேண்டும். அப்படி விவசாயி ஒருவர் நம்பிக்கை வைத்து, விளைநிலத்தை விற்று படிக்க வைத்த மகன் தான் சந்திரயான் 2 மற்றும் இஸ்லோ தலைவர் சிவன். குழந்தைகள் இஸ்ட்டா , ரீல்ஸ்களில் கவனம் செலுத்துவதால் சரியான கவனத்தை செலுத்த முடியாமல் இருக்கின்றனர்.

இந்திய குறிப்பாக தமிழர்கள் மிகவும் திறமைசாலிகள் இந்தியாவை உலகமே பின் தொடரும் காலம் விரைவில் வர உள்ளது.  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்தியர்கள் அமெரிக்கர்கள் விட 10 மடங்கு அறிவு சார்ந்த மூளை உள்ளவர்கள், அவர்களை சரியாக வழிநடத்தினால் போதும். பிடித்ததை படித்தால் தான் சாதனை செய்ய முடியும். செல்போனில் நேரத்தை செலவிடுவதை விட பொது அறிவை வளர்த்துகொள்ள வேண்டும். தினமும் செய்திதாளை வாசிக்க வேண்டும். தற்போதைய குழந்தைகள் நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும். ரீல்ஸ், இன்ஸ்ட்டாவில் கேலிக்கையை பார்த்து அதனை செய்யும் நபராக இருக்க கூடாது, அந்த செயலியை எப்படி உருவாக்க வேண்டும் என்ற நித்தனையை வளர்த்துகொள்ள வேண்டும்.  அம்பேத்கார், அறிஞர் அண்ணாவை போல வழிநடத்தும் தலைவர்களாக உருவாக புத்தகங்களை வாசிக்க வேண்டும், தேர்வுகளை எண்ணி அஞ்சக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Loading