மார்பக புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்த முடியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை.

உலகம் எங்கிலும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்கப புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கபட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. கோவை பந்தய சாலையில் உள்ள தாமஸ் பார்க லைட் டவரை பிங்க் நிறத்தில் ஒளிரூட்டி உலக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்  பொதுமக்கள் முன்னிலையில் துவக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல் துறை ஐஜி பவானீஸ்வரி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன், மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் சந்தீஸ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மேலும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் தவமணி பழனிச்சாமி, மருத்துவமனை டீன்,மார்பக புற்று நோய் சிறப்பு மருத்துவர்கள் ரூபா, மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு அங்கு வைக்கபட்ட மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பதாகையில் தங்கள் கையெழுத்து இட்டு தொடர்ந்து செல்பி விடியோ எடுத்து கொண்டனர். 

இதை தொடர்ந்து கோவை மருத்துவமனை சிறப்பு மருத்துவர் தவமணி பழனிச்சாமி கூறுகையில்  பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் முற்றிலும் குணபடுத்த கூடியது இந்த மார்பக புற்றுநோயில் பல்வேறு வகைகள் உள்ளன. அதனை நோய் தொற்று ஆரம்ப நிலையில் நாம் எதிர்கொண்டு மார்பக புற்று நோயை பூர்ணமாக குணபடுத்திட முடியும் என்றார். இந்த மார்பக புற்றுநோய்  விழிப்புணர்வு நிகழ்ச்சி பிங்க் (Pink) நிற விளக்குகளால் ஒளிர்ந்தது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Loading