2024 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் துரிதமாக செய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் என போட்டி கடுமையாக உள்ளது. இன்னிலையில் அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் பல்வேரு தரப்பினரை சந்தித்து தங்கள் கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதில் கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையிலுள்ள கொடிசியா தொழில் அமைப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கோவை அண்ணாசிலை அருகே உள்ள கொடிசியா தொழில் அமைப்பு அலுவலகத்திற்கு சென்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கொடிசியா அமைப்பின் தலைவர் திருஞானத்தை சந்தித்து பேசினர்.
பொன்னாடை அணிவித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து வாக்களிக்குமாறு கேட்டுகொண்டார். இதில் கொடிசியா துணைத்தலைவர் கார்த்திகேயன், இணைச்செயலாளர் யுவராஜ், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Leave a Reply