கோவை பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் அதற்கு முன்னதாக உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக கட்சியில் இணைந்த உருப்பினர்களுக்கு உருப்பினர் அட்டை வழங்கபட்டது.
மேலும் மக்களை வஞ்சித்து வரும் என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து தனி ஆளாக நின்று போராடிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிற்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் கோவை ராஜ், மாவட்ட தலைவர் ரமேஷ், தொழிற்சங்க தலைவர் சோமசுந்தரம், பாமக ஊடக பேரவை கோவை மணி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் கெளசல்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Leave a Reply