பெண்களுக்கு கண்கள் எப்படி அழகோ அதுபோல் அவர்களது விரல் நகங்களும் அழகே. அழகாக இருந்தாலும் பெண்களின் ஒரு விதமான தற்காப்பு ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் நகங்கள் பராமரிப்பு செய்வது என்பது பெண்கள் ஒரு சிலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அப்படி அவர்களது விரல் நகங்களுக்கு மேலும் மெருகேற்றி அழகுபடுத்தும் நிறுவனமான NAILS’N BEYONDவின் புதிய ஸ்டுடியோ கோவை பிரூக்பீல்ட்ஸ் மாலில் இன்று துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழாவில் கலந்துகொண்ட நடிகரும் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சி.கே குமரவேல் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
கியோஸ்க் என்பது ஒரு வகையான விரைவு நெயில் சேவையாகும், இது நகரத்தில் உள்ள நெயில் கலை ஆர்வலர்களால் விரைவில் நகங்களுக்கு ஏற்ப சாயம் பூசும் உயர்தர சேவை மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது. நெயில் ஆர்ட் முன்பை விட தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. கோவையில் இளம்வயதினர், பயணிகள் மற்றும் மணப்பெண்கள் இந்த நெயில் ஆர்ட்டை அதிகளவில் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் அனுபவம் வாய்ந்த நெயில் கலைஞர்கள் வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தங்கள் வடிவமைப்புகளை பிரத்தியேகமாக வழங்குவர் என நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் நெயில் கலை ஒரு நம்பமுடியாத படைப்பு. எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்பவும், தனித்துவ பாணிகள், வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் தங்கள் நகங்களை வெளிக்காட்ட முடியும். இந்த புதிய ஸ்டுடியோவில், அதிநவீன உபகரணங்கள் மற்றும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் கைவினைப்பொருளில் வாடிக்கையாளர்களின் நகங்களை அழகுபடுத்த ஆர்வமாக உள்ளனர். மேலும் நெயில் நீட்டிப்புகள், ஜெல் நெயில்கள் மற்றும் நெயில் ஆர்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் இந்த ஸ்டுடியோவில் பெறுவார்கள் என்பதை அனைவரும் எதிர்பார்க்கலாம் என்றனர்.
Leave a Reply