கோவையில் நடைபெறும் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகான டி-ஷர்ட் மற்றும் பதக்கங்கள் வெளியிடு.

கோவையில் புற்றுநோயாகாளிகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் வகையில் கோவை கேன்சர் பவுண்டேஷன், வாக்கரூ, எல்ஜி எக்யூப்மென்ட் சார்பில் 11வது மாரத்தான் போட்டி வருகின்ற 17ம் தேதி அவினாசி ரோட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 93 வயது முதியவர் உட்பட 17 மாநிலங்களை சேர்ந்த சுமார் 18,500 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களில் 3,900ஆயிரம் பெண்கள் பங்கேற்கின்றனர். 

மேலும் கனடா, அமெரிக்கா, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த மாரத்தான் போட்டி 21 கிலோமீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் ஐந்து கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு வரும் 16ஆம் தேதி கொடிசியா வளாகத்தில் டீசர்ட் வழங்கப்படுகிறது. இதனையடுத்து போட்டிகள் 17ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இன்னிலையில் இந்த மாரத்தான் போட்டிக்கான டீ-சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி கோவை புரூக்பீல்டு மாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்று டி-ஷர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகம் செய்து வைத்தார். இதில் வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் நவ்ஷாத், கோவை கேன்சர் பவுண்டேஷன் மேனேஜிங் டிரஸ்டி பாலாஜ, ரூடஸ் இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading