வாருங்கள் 100% வாக்களிப்போம்  ராட்சத பலூனில் விழிப்புணர்வு.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்டும் வகையில் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையம் இணைந்து 100% வாக்கு பதிவினை எட்டும் வகையில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாநகர் மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பங்களிப்புடன் கோவை மாவட்ட நிர்வாகம்  மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவுணை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராட்சத பலூன் இன்று பறக்க விடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி பறக்கவிட்டார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் குழந்தைகள் விரும்பும் கார்டூன் வேடம் அணிந்தும் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Loading