கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் ஊருக்குள் கூட்டம் கூட்டமாக சுற்றுவதும், தெருவில் நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவரை கண்டு குரைப்பதும், அவர்கள் வெறியுடன் துரத்திவதும, சில நேரங்களில் பலரை கடிப்பதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலைகளில் குப்பை கொட்டபடும் இடங்கள், மீன், கோழி மாமிச கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து திரிவதால் சாலையில் செல்லும் மக்கள் மிகுந்த சிறமத்திற்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் கோவை மதுக்கரை பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை சுற்றுவட்ட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தற்போது அதிக அளவில் தெருநாய்கள் உலா வருவதுடன் தனியாக வருகின்ற பொதுமக்கள், பள்ளி குழந்தைகளை துரத்தி கடிப்பதாகவும், தெரு நாய்களால் அச்சமடையும் வாகன ஓட்டிகள், மண் குவிந்த சாலைகளில் சறுக்கிவிட்டு விழுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply