இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் மிஸ்டிகா 2023 எனும் தலைப்பில் தேசிய அளவிலான மெஜிசியன்களுக்கான போட்டி கோவை நல்லாயன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஜுனியர், சப்-ஜுனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் டில்லி, மும்பை உள்ளிட்ட நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட (மெஜிசியன்களுக்கள்) மாயாஜால நிபுணர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.
முன்னதாக நடைபெற்ற போட்டியின் துவக்கவிழாவில் செயலாளர் மலர் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். சங்கத் தலைவர் கோவை நந்தா தலைமை வகித்தார். துணைத் தலைவர் அருண் , சகாயமேரி சூப்பர் செல்வம், மாயா பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினார். காவல் உதவி ஆணையர் சேகர், பாதர் மெல்கியோர் சீனியர் மாயாஜால சக்கரவர்த்தி சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சவுகூர் செய்திருந்தார். இறுதியில் பொருளாளர் மிர்லாணிலி அமர் நன்றி கூறினார்.
இறுதியாக தேசிய அளவிலான மாயாஜால போட்டி ஜூனியர் பிரிவில் சென்னையை சேர்ந்த சித்தார்த் முதல் பரிசையும் கோவையை சேர்ந்த சுவஸ்திக் இரண்டாம் பரிசையும் இதேபோல் சீனியர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரை ராஜன் முதல் பரிசையும், கோவையை சேர்ந்த விக்னேஷ் பிரபு இரண்டாம் பரிசையும் வென்று அசத்தினர்.
Leave a Reply