கோவையில் முதல் முறையாக பழங்குடியின மக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவர்களிடம் உள்ள பொருளாதார மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதை மையமாக வைத்து மீட்டெடுக்கும் முயற்சியாக கோவை கோவில்பாளையம் பகுதியில் ‘ரன் ஃபார் நேட்டிவ் ட்ரைப்ஸ்’ (Run For Native Tribes)எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கோவையில் கேசிடி வணிக பள்ளி சார்பாக பழங்குடியின மக்களுக்கென முதல் முறையாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் தமிழக முழுவதும் உள்ள பழங்குடியினர் மற்றும் தன்னார்வலர்கள், குழந்தைகள் என 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர். மேலும் இதில் வரக்கூடிய வருவாயை பழங்குடியின குழந்தைகளின் கல்வி, பெண்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்க்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply