மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் பாரம்பரிய சிறப்பு ரயில் வரும் ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டி வைத்துக் கொள்ள தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாராந்தர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை இரவு 7:45 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 7மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இந்த சிறப்பு ரயில் மறுநாள் திங்கட்கிழமை காலை 7.30 மணி அளவில் மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் இயக்கம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதியுடன் முடிவூற்ற நிலையில் தற்போது தென்னக ரயில்வே வரும் ஜனவரி 29ஆம் தேதி வரை நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்த புறப்படும் இந்த ரயில் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழ்கடையும், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுதூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை சந்திப்பு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Leave a Reply