கோவையில் மாதிரி ஐநா சபை கலக்கும்  பள்ளி மாணவர்கள்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள டிப்ஸ் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான தென்னிந்திய மாதிரி ஐ.நா சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.இந்த நிகழ்வில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் G-20, UNESCO, UNHRC, WHO, UNLC ஆகிய 40 முக்கிய குழுக்களை குறிப்பிட்டு மாதிரி ஐநா சபை நிகழ்ச்சி நடைபெற்றது.ஐநா சபை போல் வடிவமைத்து ஒவ்வொரு மாணவர்கள் இருக்கையில் ஒவ்வொரு நாட்டின் பெயர் பலகை வைத்து ஐநா சபையில் உரையாடுவது போல் மாணவர்கள் உலகளவிலான பிரச்சனைகள் குறித்து உரையாடி விவாதித்தனர். 

இந்த மாதிரி ஐநா சபை ஐக்கிய நாடுகள் சபையில் நடவடிக்கைகள் மற்றும் சூழலை துல்லியமாக பிரதிபலிக்கும் மூலம் மாணவர்களுக்கு அரசு ஆளுமை நிறைந்த உரையாடலில் ஈடுபடுத்துவதற்கும், தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும்,பொது வெளியில் பேசும் திறன்,ஆராய்ச்சி திறன்,சொல்லாட்சி திறன், மாணவர்களின் ஒத்துழைப்பு இந்த மாதிரி ஐ.நா சபை பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்டது

மேலும் இளைஞர்களின் கல்வி எதிர் காலத்தை மேம்படுத்தி உலகிற்கு தேவையான தகவல்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையே இந்த மாதிரி ஐ.நா சபை பங்கேற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தினர்.மாணவர்கள் கல்வியில் மட்டும் சிறப்பாக செயலாற்றாமல் வெளி உலக அறிவு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஐநா சபையில் எவ்வாறு உலக நாடுகள் விவாதிக்கிறதோ அதேபோல் மாணவர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து தங்கள் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

Loading