கோவையில் ஆண்களுக்காக நவீன குடும்பநல அறுவை சிகிச்சை தேதி அறிவிப்பு.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15.03.2024 அன்று சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் (NSV) நடைபெற உள்ளது. இச்சிகிச்சை 5 நிமிடத்தில் பயற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு இலவசமாக செய்யப்பட உள்ளது. கத்தியின்றி, இரத்தமின்றி எந்தவித பக்க விளைவுகளுமின்றி செய்யப்படும் இச்சிகிச்சையினை, ஏற்றுகொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கதொகையாக ரூ.1,100/- மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி வழங்கும் ஊக்கத்தொகை ரூ.1,000/- ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் ஊக்க தொகையாக ரூ.1,000/- மொத்தம் ரூ.3,100/- வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இச்சிகிச்சையினை ஏற்பதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்பிற்க்கோ தடையேதுமில்லை. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவைசிகிச்சையினை விட பன்மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. இச்சிகிச்சைமுறை பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் விவரங்களுக்கு அலைபேசி எண் 9789780933, 9443522517, 8072865541 மூலம் அறிந்து கொள்ளலாம் என குடும்ப நல செயலகம் தெரிவித்துள்ளது.

Loading