பகுதி நேர ஆசிரியர்களை கைதை கண்டித்தும் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்.

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பத்தாண்டுகளுக்கும் மேலாக சொற்ப ஊதியத்திற்கு பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றும் தங்களை உடனடியாக தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக அறிவிப்போம் என வாக்குறுதி அளித்ததாகவும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் திமுக ஆட்சி வந்தால் விடியல் வரும் என எண்ணி இருந்த சூழலில் இதுவரை விடியல் வரவில்லை எனவும் இன்னும் விடியலுக்காக காத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

Loading