தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சார்பில் செப்டம்பர் 7ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு.

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோவை கிராண்ட் ரீஜண்ட் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர்களான ஜெயபால், டேக்ட் ஜேம்ஸ், முத்து ரத்தினம், சுருளி வேல், திருப்பூர் ஸ்ரீ காந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது, பல வருடங்களாக தொழில் துறையினருக்கு மூலப்பொருட்களை வழங்கி வந்த மாநிலங்கள் பல்வேறு மானியங்களை அறிவித்துள்ளது இதனால், தொழில் துறையினர் தொழிலை அதிகபடுத்த பல்வேறு, இடங்களில் புதிய உற்பத்தியை துவங்க முன்வந்துள்ளனர். 

இந்த நிலையில், சிறு குறு தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தமிழகத்தில், பீக் ஹவர் கட்டணம் மற்றும் 430% நிலைக்கட்டணம் உள்ளது. எனவே பீக்ஹவர் கட்டணம் மற்றும் 430 சதவிகித நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தளர்த்த வேண்டும், என்று மத்திய மாநில அரசுகளிடம், கோரிக்கை அளித்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனை தொடர்ந்து வருகின்ற 07.09.2023 அன்று, கோவை-திருப்பூர் மாவட்ட எல்லையான காரணம்பேட்டை பகுதியில் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டமானது நாங்கள் அன்பவித்து வருகின்ற பல்வேறு இன்னல்களையும், கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் விதமாக அமையும் என குறிப்பிட்டனர். மேலும் உடனடியாக தமிழக முதல்வர், புரிந்து கொண்டு எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டு்ம் எனவும் இல்லை என்றால் அடுத்தடுத்த போராட்டங்கள் தொழில் துறையினர் முன்னேடுக்க நேரிடும் என தெரிவித்தனர்.

Loading