நாளை கோவையில் சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளை சொட்டு மருந்துகள் போடப்படும் முகாம்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 வார்டுகள் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 45 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 327 போலியோ சொட்டு மருந்து முகாம்கள் 07 டிரான்ஸிட் முகாம்கள் (இரயில் மற்றும் பேருந்து நிலையங்கள்) 14 நடமாடும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள், 45 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், விமான நிலையம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 3 பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்ட மொத்தம் 351 இடங்களில், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது.
எனவே, நாளை நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள். கண்காணிப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். எனவே போலியோ சொட்டு மருந்து தினத்தன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்கும்படி மாநகராட்சி சார்பாக 5 வயதிற்குட்பட்ட அனைத்து பெற்றோர்களிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிபிட்டுள்ளது.
Leave a Reply