விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு “கணபதி தரிசனம்”, கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்..

கோவை பெரிய கடைவீதியில் உள்ள பூம்புகாரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு “கணபதி தரிசனம்” கண்காட்சி மற்றும் விற்பனை இன்று முதல் வருகின்ற செப்டம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  தமிழ்நாடு கைத்திறத்தொழிலாளர் வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் பல கண்காட்சிகள் நடத்தி வருவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக “விநாயகர் சதுர்த்தி” முன்னிட்டு பல்வேறு வகையில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பித்தளை, பஞ்சலோகம், சந்தனமரம், கருப்பு உலோகம், தஞ்சை ஓவியங்கள், காகிதகூழ், களிமண், மார்பிள் டஸ்ட் சிலைகள், கொண்டபள்ளி பொம்மைகள், நூக்கமர உட்பதிப்பு வேலைபாடுகள், கண்ணாடி, வெள்ளருக்கு விநாயகர் ,நவதானியம், மரத்திலான விநாயகர், பளங்கி கல், விநாயகர் நிற்பது போலவும் படுத்திருப்பது போலவும், தேங்காய் கூடுவையில் இருப்பது என எண்ணற்ற வகையான விநாயகர் சிலைகள்  கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

கண்காட்சியில் பலவிதமான விநாயகர் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 வகைகள் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளது. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து விநாயகர் சிலைகளுக்கு 10% தள்ளுபடியும் கடன் அட்டைகளுக்கு எந்தவித சேவை கட்டணமுன்றி விற்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

Loading