உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு கோவை ஆர்எஸ்புரம் தபால் நிலையம் அருகில் அமைந்துள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்தும் காவல்துறை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமை நடைபெற்று வருகின்றது. இதில் கோவை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு இலவச கண் பரிசோதனை, கண் கண்ணாடிகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். இதன் துவக்க விழா டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை வளாகத்தில் இன்று கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையாளர் சிற்றரசு, டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.சுனில் ஸ்ரீதர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
விசன் 2020 திட்டத்தில் 2020 ஆம் ஆண்டளவில் கீழ்க்கண்ட ஏழு நோய்களால் எவரும் பார்வை இழக்ககூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அரசுகள் செயல்பட உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. கண்புரை, கண்ணிமை உட்புற டிரைகோமா, கண்ணில் நீர் வழிதல், குழந்தைகளில் பார்வைக் குறைபாடு, மங்கலான பார்வை, சர்க்கரை நோயால் விழித்திரைப் பாதிப்பு, கண் நீர் அழுத்த நோய் ஏனெனில் இவை அனைத்திற்கும் முறையான சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர போக்கு வரத்து காவல் துறை உதவி ஆணையாளர் சிற்றரசு பேசுகையில் போக்குவரத்து காவலர்கள் வெயில், மழை மற்றும் தூசு அதிகம் உள்ள பகுதியில் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும் என்றார். இதில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ, தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் மற்றும் தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை மற்றும் மருத்துவ இயக்குனர் மற்றும் கார்னியா, கேட்ராக்ட், ரெப்ராக்டிவ் சர்ஜன் டாக்டர் முகமது சபாஜ் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply