தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு
மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி அக்டோபர் மாதத்திற்கான பயிற்சி, 06.10.2023 வெள்ளிக்கிழமை அன்று அளிக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பயிற்சியின் முக்கிய அம்சங்களாக தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்,
பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனை பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை கற்றுத்தரபடுகின்றன.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சிக் கட்டணம் ரூ.590/- நேரிடையாக
செலுத்த வேண்டும் எனவும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை இருக்கும் எனவும் மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தொலைபேசி (0422-6611214) மற்றும் மின்னஞ்சல் entomology@ tnau.ac.in
அணுக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply