நாடாளுமன்ற பொதுத்தேர்தல்: கணுவாய் பகுதியில் வாகன தணிக்கை.

நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர், காவல் துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகையை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தால் அந்த தொகை அல்லது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோவை தடாகம் சாலை கணுவாய் பகுதியில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருவதை கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் மணிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்

Loading