கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினர் போதை பொருட்களை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக இன்று கருமத்தம்பட்டி  பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் சோமனூர் பிரிவு அருகே சோதனை மேற்கொண்டபோது  கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த  குஞ்சாபிஹாரி(48) மற்றும்  சூர்யகாந்தா ஸ்வீன் (49) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து  2 கிலோ  கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றை  பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை மாவட்ட காவல்துறையினரால்  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 67 நபர்கள் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  அவர்களிடமிருந்து சுமார் 28.420 கிலோ கிராம் எடையுள்ள  கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு  கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading