மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது; கோவை மாநகராட்சி அறிவிப்பு.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ளது போன்று கோவை மாநகராட்சி அலுவலகத்திலும் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தபட்டு வந்தது. இன்னிலையில் நிர்வாக காரணங்களால் கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நாளை நடைபெறாது என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது. இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Loading