மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2024 மக்களவைத் தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29ஆம் தேதி முதல் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாசினை ஆதரித்து மார்ச் 29 தேதியும், திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுப்பராயனை ஆதரித்து ஏப்ரல் 14ஆம் தேதியும், கோவை மக்களை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து ஏப்ரல் 15ஆம் தேதியும், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி ஆதரித்து ஏப்ரல் 16ஆம் தேதியும் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply