இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் முப்படைகளை அணிவகுப்பு மறியாதையை ஏற்றுகொண்டு பின்னர் கொடியேற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மறியாதை செய்தார். இதனை தொடர்ந்து சிறப்புறையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக்கொள்ளும் திறனை பெற்றுள்ளது.
இளைஞர்கள் தான் நமது நாட்டின் வளர்ச்சியை வழி நடத்திச்செல்கின்றனர். இந்தியா தான் உலகில் இரண்டாவது ஜனநாயக நாடு என்றவர் 140 கோடி உறுப்பினர்களைக் கொண்ட எனது குடும்பம் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதாக பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார்.
மேலும் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம், அங்கு தற்போது அமைதி திரும்பி வருகிறது.
அமைதியின் மூலமாக மட்டுமே மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முயற்சி எடுத்து வருகிறது. மணிப்பூரில் வன்முறையால் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுக்காக துணை நிற்கிறது என தெரிவித்தார். பாரத பிரதமராக நரேந்திரமோடி 10வது முறையாக தேசிய கொடியேற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply