தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் அவர்களின் தொகுதிகளில் உள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் கட்சி சாராத முக்கிய பிரமுகர்களையும் பிரபலங்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதுடன் அவர்களின் ஆதரவையும், கேட்டுப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
Leave a Reply