கோவை-பெங்களூரு இடையேயான தமிழ்நாட்டின் 4-வது வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்கபட்டது. 8 ரயில் பெட்டிகள் கொண்ட கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் ஓட்டம் தொடங்கியது.வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழாவில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை எம்பி நடராஜன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று மட்டும் 6 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 2 அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கோவை-பெங்களூர் இடையான வந்தே பரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகள்,பயணிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.இந்த ரயில் சேவை ஜனவரி 1-ம் தேதி முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் முதல் வகுப்பில் 44 பேரும் இரண்டாம் வகுப்பில் 592 பேரும் மொத்தமாக 636 பேர் பயணிக்கலாம். முதல் வகுப்பிற்கான கட்டணம் 1910 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கான கட்டணம் 1025 ரூபாய் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
Leave a Reply