நீர் நிலைகளில் குளிக்க தடை தண்ணீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை.

குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பொது நீர் நிலைகளில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதித்து கேரள, பாலக்காடு மாவட்ட சோலையார் கிராம் பஞ்சாயத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும் வெயிலின் தாக்கதாலும் நீர் நிலைகள் வேகமாக வற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அனை, பில்லூர் அனை வற்றத்தொடங்கியுள்ளதால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இன்னிலையில் தமிழகத்தில் கோவை உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலையுடன் கடுமையான வெயில் இருக்கும் என கூறிய வானிலை ஆய்வு நடுவம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னிலையில் கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளா ஆணைகட்டி பகுதி மற்றும் அட்டப்பாடி இடையே உள்ள சோலையார் கிராம் பஞ்சாயத்து சார்பில் பொது நீராதாரங்களில் ஏற்பட்டு வரும் வரட்சி மற்றும் தண்ணீர் தடுப்பாட்டை கருத்தில் கொண்டு நீரோடைகள்,  குளங்களில் மாசு ஏற்படுத்தும் வகையில் குளிப்பது, துணி துவைக்க தடை விதித்துள்ளதோடு இது போன்ற செயல்களில் அத்துமீறுபவர்கள் மீது கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் 219(S)ன் கீழ் ரூ.50000 அபராதமும், 6மாத சிறை தண்டனையும் விதிக்கபடும் என தெரிவித்துள்ளது.

Loading