நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவை மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் மாநகராட்சி சத்துணவு அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அந்தக் கோலங்களில் “வாக்களிப்பது கடமை அதுவே நமது உரிமை, வாக்கின் வலிமை தேசத்தின் பெருமை, ஒரு விரலில் சரித்திரம் படைப்போம், 19.04.2024 வாக்களிக்கும் நாள், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல நாட்டிற்கான எனது முதல் வாக்கு” உள்ளிட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் அவர்கள் வரைந்த இரண்டு ஓவியங்களிலும் தேர்தலை குறிப்பிடும் வகையில் வாக்களிக்கும் இயந்திரம் தேசியக்கொடி, வாக்கு மை, தேசிய கொடி, இந்தியா வரைப்படம், முக கவசம் அணிந்த வாக்காளர்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியங்களை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செல்வ சுரபி நேரில் பார்வையிட்டார்.
Leave a Reply