கோவை செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனமான வாக்-கரோ நிருவனத்தின் சமுக நிதி பங்களிப்புடன் இணைந்து சுமார் 6.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே இருந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டு புதிதாக கால்பந்து அகாடமி அமைக்கபட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. கால்பந்தை உதைத்து விளையாடி கால்பந்து மைதானத்தை திறந்து வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, தனியார் பங்களிப்புடன் இந்த மைதானம் சுமார் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் திறந்து வைத்துள்ளதாக கூறினார்.

மாவட்டத்தில் பல இடங்களிலும் இதைபோல் தனியார் பங்களிப்புடன் பள்ளி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் “விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிகள் கணக்கு” எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர்,கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மினி ஸ்டேடியம் அமைக்கபட உள்ளதாக கூறினார்.

தற்போது பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் இதைபோல் தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் பணி அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறியதுடன் இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாணவர்கள் போதை பொருட்கள் என வழிமாறி செல்லாமல் இருக்க விளையாட்டு என்பது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றவர் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.
Leave a Reply