வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார் இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு,மண்டல குழுதலைவர் புஷ்பலதா ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதுமிருந்து 38 மாவட்டங்களை சேர்ந்த 912 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு சதுரங்கம் விளையாடி வருகின்றனர் போட்டிகளில் வெற்றி பெறுவோர்கள் தேசிய அளவிலான சதுரங்க போட்டிகளில் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்டத்தில் டெங்குவால் இதுவரையில் 7பேர்பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது.
மேலும் பள்ளி வளாகங்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் ஆகியவைகளை தூய்மைபடுத்தி வருகின்றனர். தொடர்ந்து கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளோம் மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இருப்பினும் டெங்கு காய்ச்சல் கட்டுபடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் வைரஸ் காய்ச்சலால் 227 பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Leave a Reply