அக்டோபர் 2ம் தேதி காந்திஜெயந்தியன்று கோவை மாநகராட்சி பகுதிகளில் இறைச்சி கடைகள் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் (முழு கூடுதல் பொறுப்பு) செல்வசுரபி தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
“02.10.2023 திங்கட்கிழமை அன்று காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தபட்டு வரும் உக்கடம், கணபதி, போத்தனூர், சிங்காநல்லூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply